வான்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டத்திலும் சில பகுதிகளில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டளவியள் திணைக்களம் தெரிவித்துள்ளது.