தியத்தலாவ – கஹவெல்ல பகுதியில் பஸ் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பிற்கு இராணுவ வீரர் ஒருவரே காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில் குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்தில் இருந்த மூன்று ஆசன வரிசையில் மூவர் அமர்ந்திருந்ததாகவும், அதன் நடுவிலிருந்தவர் எழுந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் அருகில் அமர்ந்திருந்த இருவரும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த வரிசையில் நடுவிலிருந்தவர் ஒரு இராணுவ வீரரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைபெற்று வருவதால் அவர் குணமடைந்ததும் வாக்குமூலம் பெறப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் நடைபெறவுள்ளன.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த 9 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.