மாலபே – சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் தற்போது கல்வி கற்றுவரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் அடிப்படைத் தகைமைகள் பரீட்சிக்கப்பட்டதன் பின்னர் அவர்களை இவ்வாறு இணைத்துக்கொள்வதற்கும் இக்கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சட்டமா அதிபர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றினர்.