பத்திரிகையில் வெளியான செய்தியால் யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி!

பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காததால் யாழ்ப்பாணத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார்.

யாழில். உள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்னதாக, மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்த போது அவர் அங்கிருந்தவர்களால் காப்பற்றப்பட்டுள்ளார்.

யாழில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில் தன்னை பற்றி அவதூறு ஏற்படுத்தும் விதமாக செய்தி வெளியாகியதால், அவர் யாழில். அமைந்துள்ள பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையிலும், எந்த விதமான நடவடிக்கையும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு எடுக்கவில்லை என்றும், குறித்த செய்தியினால் தான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இதற்கு மேல் தான் உயிருடன் வாழ விரும்பவில்லை என தெரிவித்து தன் வசம் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ மூட்ட முயற்சித்துள்ளார்.

ஆனால் அதிஷ்டவசமாக அருகில் இருந்தவர்கள் இணைந்து அவரை காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts