தாமரை மொட்டிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்ததன் பின்னணியில் நாமல் இந்த கருத்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து நாமல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அன்பினதும் கருணையினதும் குறியீடுதான் தாமரை மொட்டாகும். அதிலிருந்து அமைதியும் இணக்கமும் சுபீட்சமுமே மலரும்’ என குறிப்பிட்டுள்ளார்.