சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு தம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றால் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அனுமதியை பெற்றுத் தருவேன். எனினும் இதுவரை சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்படவில்லை” என கூறினார்.