உள்ளூராட்சி மன்றங்களில் ஏறக்குறைய 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் சிக்கல் நிலை நிலவுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
20 உள்ளூராட்சி மன்றங்களிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை வழங்க முடியும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் நியமிக்கப்படவிருந்த 8356 உறுப்பினர்களின் எண்ணிக்கை 325 ஆல் அதிகரிக்கப்படவுள்ளது.
குறித்த உறுப்பினர்களுக்கான பதவி தீர்மானிக்கப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரம் கட்சிகளின் செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீதம் பெண் பிரதிநிதித்துவம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.