இரணைமடுவில் வேறு இடத்திற்கு நகர்த்தப்பட உள்ள அரச மரம்!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில் காணப்பட்ட அரச மரம் பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

படையினரால் பாரிய குழியினை ஏற்படுத்தி, அரச மரம் பாதிக்கப்படாத வகையில் அதனை நகர்த்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் இந்த அரச மரம் வேறொரு இடத்தில் வைக்கப்படலாம் என பொது மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

குறித்த இடத்தில் 2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அண்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts