சேதமடைந்த, கிழிந்த நாணயத்தாள் தொடர்பில் மத்திய வங்கி முக்கிற அறிவிப்பு!

சேதமடைந்த மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை வங்கிகள் மூலம் மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நிதி திணைக்களத்தின் உயர் அதிகாரி தீபா செனவிரத்ன இதனை தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

நாணயத்தாள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அதனை பயன்படுத்துவது நாட்டின் நற்பெயருக்கு மிகவும் முக்கியமானது.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் நாணயத்தாள்கள் சுத்தமாக வைத்திருப்பது மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது.

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்து தமது நாட்டு நாணயத்தாள்களுக்கு பதிலாக இலங்கை நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் போது அதன் சுத்தத்தன்மை தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்துகின்றனர்.

இவ்வாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts