அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவுக்கு மாற்றம்!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட, 3 அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை, அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (02) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து அரசியல் கைதிகள் மூவரும் உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கடந்த செப்ரம்பர் மாதம் 26 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்திலேயே குறித்த வழக்குகள் விசாரணை செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில குறித்த வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இன்று (01) குறித்த வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திலிருந்து, வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கொழும்புமேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts