இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடக் கூடாது!

இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மைக்காலங்களில் இராணுவத்திற்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவது இராணுவத்தின் மீதான கருத்துக்கள் அவதூறு பரப்பும் விதத்தில் காணப்படுகின்றன. இனம்தெரியாத நபர்களினால் குறிப்பாக இராணுவத்தின் கௌரவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகள் வெளிவருகின்றன.

அத்துடன் இராணுவத்தினரால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் ஆட்சேர்ப்பு போன்ற வீடியோக்களை சில அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் படையினருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் உள்ளடக்கப்படுவது மிகவும் பாதகமான விடயமாகும்.

தேசிய பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை கட்டியெழுப்பும் நோக்கில் செயற்படும் இலங்கை இராணுவத்தை இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் இணைத்து தகவல்களை வெளியிட வேண்டாமென அனைவரிடமும் இராணுமானது தாழ்மையோடு கேட்டுக் கொள்கின்றது” என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts