முதலமைச்சர் பிணையில் விடுதலை!

பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.

அதன்பின்னர் இன்று காலை சட்டத்தரணி சகிதம் பதுளை பொலிஸில் சரணடைந்த ஊவா முதல்வர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு, ஊவா மாகாணத்திற்கு சாமர சம்பத் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டாரென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts