மக்கள் பசியோடு இருக்கையில் கட்டடங்களைக் கட்டியெழுப்புவதாலும் உரிமைகள் பற்றிப் பேசுவதாலும் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அல்லது இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மைவேண்டும். இந்த நிதியை அவர்கள் முறையாகப் பயன்படுத்தியிருந்தால் மக்கள் எனது அமைச்சு வாசலைத் தேடி வரமாட்டார்கள்.
மக்கள் பசியோடு இருக்கையில் உரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. மண்டபங்களைக் கட்டியெழுப்பும் பணத்தை வறிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழங்கவேண்டும்” என்று அமைச்சர் அனந்தி சசிதரன் மேலும் தெரிவித்தார்.
- Monday
- December 23rd, 2024