கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவத்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமையினாலேயே இந்த நிலையம் மூடப்பட்டுள்ளது.
எனினும் கடவுச்சீட்டு மற்றும் வீசா சேவைகள், தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.