பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞனுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நேற்றயதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் குறித்த உத்தரவை பிறப்பித்தார்.
இதன்போது குற்றவாளிக்கு 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 02 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபா அபராதமும், அபராதத்தை செலுத்த தவறின் மேலும் 03 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு யாழ். பருத்தித்துறைப் பகுதியில் வீட்டில் இருந்த சிறுமையை கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டமையை ஒப்புக்கொண்டதையடுத்து குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.