யாழ் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்மாதிரியான செயற்பாடு!

மாணவன் ஒருவரால் யாழ்.நகரில் தவறவிடப்பட்ட பணப்பையை (பேர்ஸ்) கண்டெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் அதனை உரிவாறு ஒப்படைத்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றயதினம் இடம்பெற்றுள்ளது.

கொக்குவிலைச் சேர்ந்த மாணவன் யாழ். நகருக்கு வந்து திரும்பிய போது தனது பணப்பையைத் தவறவிட்டுள்ளார்.
அந்தப் பணப்பை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைக்கு முனபாக வீதியில் கிடந்துள்ளது.

அதனை யாழ். பொலிஸ் நிலைய போக்குவரத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

அவர் அந்தப் பணப்பையில் குறிப்பிடப்பட்டிருந்த கைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு மாணவனின் குடும்பத்தை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்துள்ளார். மாணவனால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அந்தப் பணப்பை உரியவாறு மீள வழங்கப்பட்டது.

பணப்பைக்குள் மாணவனின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் 7 ஆயிரம் ரூபா பணம் என்பன இருந்த்தாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Posts