மதுபானச்சாலைகளில் பணியாற்ற பெண்களாலும் முடியும்: பொன்சேகா

பெண்கள் மதுபானச்சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது தற்போது நாட்டில் பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், பெண்களால் எந்த வேலைகளையும் செய்ய முடியும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்ளும் சில தீர்மானங்கள் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அதில் எந்தப் பிழையும் காணப்படவில்லை. தற்போது நாட்டில் மதுபானச்சாலைகளில் பெண்கள் பணியாற்றுவதற்கான அனுமதி தொடர்பான சர்ச்சைகள் தோன்றியுள்ளன. இது குறித்து ஜனாதிபதியும் நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

எனினும், தற்போது பெண்கள் மதுபானச்சாலைகளில் பணியாற்ற இடமளிப்பது பெரிய பிரச்சினையாகியுள்ள நிலையில், உலகின் பல நாடுகளில் போர் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குகின்றனர்.

மேலும், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 2000 விஹாரைகளை மூடிவிட்டு, 2000 மதுபானச்சாலைகளை திறந்துள்ளமை யாவரும் அறிந்த விடயமாகும்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts