நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு நல்லொழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்ய வேண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹிங்குராங்கொட பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமது நாட்டின் அரசியல் கலாசாரத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் ஊழல் மோசடியற்ற மக்கள் சார்பு பயணத்தின் ஆரம்ப அடியாக இத்தேர்தலில் மக்கள் மிகுந்த பொறுப்புடன் தமது கடமையை நிறைவேற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
தேசிய அரசியல் தலைவர்களினது பயணத்தின் ஆரம்பம் என்ற வகையில் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நல்லொழுக்கமுள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, உள்ளூராட்சி நிறுவனங்களில் நேர்மையான மக்கள் சார்பு பிரதிநிதிகளை உருவாக்குவதன் மூலம் முழு அரசியல் கலாசாரத்தையும் சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த பொறுப்பை கட்சியின் தலைவர் என்ற வகையில் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.