ஜனாதிபதி ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம்: சட்டமா அதிபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு வருடங்களுக்கு பதவியில் நீடிக்கலாம் என சட்டமா அதிபர் தனது கருத்தை நீதிமன்றில் முன்வைத்துள்ளார்.

எத்தனை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்று உச்ச நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அபிப்பிராயம் கோரியிருந்த நிலையில் அது குறித்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு ஆராய்ந்து வருகின்றது.

பிரதம நீதியசர் பிரியசாத் டெப் தலைமையிலான இந்த குழு இன்று (வியாழக்கிழமை) உச்ச நீதிமன்றில் கூடி ஆராய்ந்து வருகின்ற நிலையில் சட்டமா அதிபர் மேற்படி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Posts