2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை குறைவடைந்திருப்பதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டில் 4 இலட்சத்து 93 ஆயிரத்து 320 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த வருடத்தில் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 620 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி பதிவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், மோட்டார் சைக்கிள் பதிவு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் பொதுப்போக்குவரத்து வாகனப் பதிவு அதிகரித்துள்ள தாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் கீழ் புகை தொடர்பான சான்றிதழ் இல்லாத பட்சத்தில் வாகனப் பதிவுகளை மேற்கொள்ள முடியாது என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இதற்காக அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவலை அவர் நிராகரித்துள்ளார்.