யாழ். தொலைபேசி விற்பனை நிலைய கொள்ளையுடன் தொடர்புடைய மேலும் ஒரு நபர் நேற்று கைது!

யாழ்.குடாநாட்டில் தொலைபேசி விற்பனை நிலையங்களில் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள யாழ். பொலிஸார் இதுவரை 400 கைத்தொலைபேசிகள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்தில் நாவலர் வீதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையமொன்று இரண்டு தடவைகளும், நல்லூரடியிலுள்ள கணனி உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையம் மூன்று தடவைகளும் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த 17ம் திகதி நல்லூரடியிலுள்ள விற்பனை நிலையம் உடைக்கப்பட்ட போது, அப்பகுதி மக்கள் உசாரடைந்து கொள்ளையர்களை விரட்டியுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியின் இலக்கத்தை பொதுமக்கள் பதிவு செய்து பொலிஸாருக்கு வழங்கியுள்ளனர்.

இதனடிப்படையிலான விசாரணைகளின் போது 5பேர் கைதுசெய்யப்பட்டதுடன், நேற்றும் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இவர்களிடம் நடத்திய விசாரணைகளில் இவர்கள் 1000 வரையான கைத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாகவும், எனினும் அவர்களிடம் 400 கைத்தொலைபேசிகளே இருந்ததாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், கொள்ளையர்களில் ஒருவர் யாழிலுள்ள உயர்தரப் பாடசாலையொன்றின் மாணவன் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஏனையோர் பலாலி வீதி, அரியாலை, குருநகர், நல்லூரடி, பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts