பிளாஸ்ரிக் குறித்த விழிப்புணர்வை மக்கள் மனதில் விதைக்க கிளிநொச்சி மாணவர்கள் செய்த காரியம்!

உலகளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் பொருட்களை தடை செய்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், கிளிநொச்சியிலும் இதற்கான முதற் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக பிளாஸ்ரிக் கழிவு பொருட்களால் உருவாக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரம் கிளிநொச்சியில் பொதுமக்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்ரிக் பொருட்களின் பாவணையை கட்டுப்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டத்தை கிளிநொச்சி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட குறித்த கிறிஸ்மஸ் மரம், எதிர்வரும் பொங்கல் தினம் வரை காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Related Posts