க.பொ.த. உயர்தர பரீட்சை : அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ். மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியை சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் இவ்வாறு பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் கொழும்பு பிரதேச பாடசாலைகளுக்கு முற்பகல் 10 மணியளவில் அனுப்பி வைக்கப்படும் என்றும் வெளி பிரதேச பாடசாலைகளுக்கு வெள்ளிக்கிழமைக்குள் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்கைக்கு மூன்று இலட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

இவர்களுள் இரண்டு இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts