எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நூறு சதவீதம் பெண்களை மாத்திரம் கொண்டு இயங்கும் வகையில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மாவட்ட ரீதியில் இரண்டு சதவீதம் இவ்வாறான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், இதில் கண்காணிப்பாளர்களாவும் பெண்களே நியமிக்கப்படுவர் என்றும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவும் பெண் பொலிஸாரே நியமிக்கப்படவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் 25 சதவீதமாக காணப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில், கடந்த தேர்தல்களை விட இம்முறை தேர்தலில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. பெண் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள சில கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.