வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தனுக்கு கந்தையா அருந்தவபாலன் தலைக்கவசத்தால் தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தயாரிப்பின் போது வேட்பாளராக முன்னர் நிறுத்துவதாக சம்மதிக்கப்பட்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன.
அதனால் கட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் முரண்பட்டு கொண்டனர். முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் கட்சியின் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.
அதனை தொடர்ந்து அருந்தவபாலனுடனான அணியினரும் காரில் ஏறி அலுவலகத்தை விட்டு வெளியேற முற்பட்டனர். அதன் போது ஓடிக்கொண்டு இருந்த காரின் கதவை திறந்து காரை நிறுத்த மாகாண சபை உறுப்பினர் சயந்தன் முனைந்த போது , அருகில் நின்றிருந்த அருந்தவபாலன் தலைக்கவசத்தால் சயந்தனை தாக்க முற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் , நிலைகுழைந்த மாகாண சபை உறுப்பினர் காரினை தொடர்ந்து பயணிக்க வழிவிட்டு விலகி நின்றார் எனவும் , அதனை தொடர்ந்து உள்ளிட்டோர் கட்சி அலுவலகத்தில் இருந்து வெளியேறி இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.