முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு 56 வருடங்கள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழ்வருக்கு தலா 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட ஏழ்வரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டிக்கப்பட்டவர்கள் மன்னார், சாவகச்சேரி, வவுனியா, புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.

8 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரினால் வெவ்வேறாக இவர்கள் மீது குற்றப் பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வில்பத்து தேசிய சரணாலயத்தில் கெப் வாகனமொன்றை இலக்கு வைத்து 2006ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது.

Related Posts