முல்லைத்தீவில் மாணவி மீது ஆசிரியர் துஷ்பிரயோக முயற்சி!: பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு விஷ்வமடு பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்பிற்கு கடந்த 9ஆம் திகதி சென்ற குறித்த மாணவியை, அவ்வகுப்பை நடத்தும் ஆசிரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். மாலை வேளை என்பதால் மாணவியும் ஆசிரியருடன் சென்ற நிலையில், ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இத்துஷ்பிரயோக முயற்சி இடம்பெற்றுள்ளது.

எனினும், சுதாகரித்துக்கொண்ட குறித்த மாணவி, அங்கிருந்து தப்பிச் சென்று வீட்டாரிடம் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts