சருமத்தை அழகுப்படுத்த பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருளுக்கு சந்தையில் பெரும் கிராக்கி உண்டு.இதனை பயன்படுத்துவதன் மூலம் மேனி அழகாக காட்சியளிக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கை.
இதுதொடர்பில் சந்தையிலுள்ள பொருட்கள்குறித்து நுகர்வோர் அதிகார சபை பாவனையாளர்களின் கவனத்திற்கு பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான சட்ட விதிகளை விரைவாக தயாரிக்குமாறும் சந்தையில் சோதனைகளை நடத்துமாறும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ரிசாட் பதியுதீனால் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பாக அதகாரசபை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக செயற்ப்பட்டதன் மூலம் இவ்வாறான உடனடி பெறுபேறுகளை பெற்று தருவதாக கூறப்படும் ஆககூடுதலான கேள்விகளைக்கொண்ட அழகு சாதன பொருட்கள் பலவற்றில் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. காலாவாதியாகும் திகதியும் அவற்றில் இல்லை. தயாரித்த நாடு தொடர்பான குறிப்பும் இடம் பெறுவதில்லை.
இவ்வாறான அழகு சாதனங்களில் அடங்கியுள்ள இரசாயனம் குறித்தும் குறிப்பிடப்படாத வைட்னிங் கிரிம் என்ற 6 அழகு சாதன பொருட்கள் நுகர்வோர் தொடர்பான அதிகார சபையினால் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் சிலவற்றில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து இவை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அவற்றில் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய உலோகத்தன்மை குறித்த அறிக்கை ஒன்று பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2017 டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கையுடன் மாலிகாகந்த நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாலிகாகந்த நீதவான் நீதி மன்றத்தினால் இது தொடர்பில் தீப்பு வழங்கப்பட்டது.
பாவணையாளர்களை தவறான வழியில் இட்டு சென்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கிரிம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் அனைவர்களுக்கும் தலா 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டது.
ஆககூடுதலான கேள்விகளை கொண்டவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. கிரிம் வகைகளை சந்தையில் இருந்து அகற்றுமாறும் கிரிம் வகைகளின் வர்த்தக குறியை ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு தெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் தொடர்பான அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபையின் அதிகாரி வெளிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த பரிசோதனையின் போது இவற்றில் ஈயம் ஹாசனிக் உள்ளிட்டவை அளவுக்கதிகமாக காணப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர் விநியோகஸ்தர் தயாரிப்பாளர் போன்றோரின் விபரம் குறிக்கப்படாத வர்த்தக குறியீடுடன் சமர்ப்பிக்கப்படும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை கேட்டுகொண்டுள்ளது.
இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய அவற்றில் அடங்கியுள்ளவற்றை கவனத்தில் கொள்ளுமாறும் அதிகார சபை கேட்டு கொண்டுள்ளது.