வடமாகாணசபையின் 2018ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நேற்று (செவ்வாய்க்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் முன்மொழியப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 111 ஆவது அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று காலை சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது 2018ஆம் நிதி ஆண்டுக்கு 26 ஆயிரத்து 754 மில்லியன் 61 ஆயிரம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சபையில் தெரிவித்துள்ளார்.
இப்பாதீட்டுக்கான விவாதங்கள் எதிர்வரும் 12ஆம் 13ஆம் 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.