தோல்வியில் முடிவடைந்த பல்கலைக்கழங்கள் ஆசிரியர் போராட்டம். இன்றுமுதல் கடமைக்கு திரும்புகின்றனர்!

இன்று பல்கலைக்கழக வேலைநிறுத்தத்தை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளபோதிலும், சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் முன்மொழிவுகள் போதியவையல்லவெனவும் அரசாங்கம் தமது மனத்தாங்கல்களை கவனிக்கும்வரை அதன் போராட்டம் தொடருமெனவும் பல்கலைக்கழகங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

‘வேலைநிறுத்தம் நிரந்தரமாக கைவிடப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் தற்காலிக நிறுத்தமே இது. நாம் மேலும் உறுதியுடன் போராட்டத்தை தொடக்குவோம். அரசாங்கம் தான் ஒப்புக்கொண்டதை செய்யுமென எதிர்பார்க்கின்றோம். நாம் கவனமாக அவதானித்துக்கொண்டுள்ளோம்’ என பல்கலைக்கழங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பேச்சாளர் கலாநிதி மஹிம் மென்டிஸ் கூறினார்.

சங்கத்தின் அங்கத்தவர் பலர், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுமளவுக்கு சாதிக்கப்படாததனால் கூட்டுப் பிரகடனம் தேவையில்லையெனக் கருதியதால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பங்குபற்றவில்லை. க.பொ.த. (உ/த) விடைத்தாள்கள் புள்ளிடவேண்டியிருப்பதாகவும் பல்கலைக்கழக பாடநெறிகளை தொடரவேண்டியிருப்பதாலும் விரிவுரையாளர்கள் 3 மாதச் சம்பளமின்றி இருப்பதாலும் நாம் வேலைநிறுத்தத்தை கைவிட்டோமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

Related Posts