நாட்டிலிருந்து 1100 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்கு திசை வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் நிலவும் தாழமுக்க நிலை எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் வலுவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடமாகாணங்களிலும் , வடக்கு கிழக்கு கடற்கரையோர பிரதேசங்களிலும் இன்று முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
வடக்கு , வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர்மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை ,மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகமாக காற்றுவீசுக்கூடும்.
பொத்துவிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று தற்காலிகமான வீசுக்கூடும். இடிமின்னலிலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.