அரசியல் அமைப்பை கொண்டு இன ஒற்றுமையை கட்டியெழுப்புவதை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குர்ரே தெரிவித்துள்ளார்.
புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வெற்றி பெற்றுவிட்டோம் என்ற இறுமாப்பை களைந்து பாதிக்கப்பட்ட மக்கள் மனங்களை வெல்ல இதுபோன்ற முன்னேற்ற கரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.