சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பராமரிப்பிலுள்ள கிளிநொச்சி இரணைமடு பகுதி காணிகள் அளவிடப்படுவதன் நோக்கம் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.
குறித்த காணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) அளவிடப்பட்டு வருகின்றன. இக்காணிகளில் பொதுமக்களது காணிகளும் உள்ளடங்குகின்ற நிலையிலேயே அவர்கள் இவ்வாறு வினவியுள்ளனர்.
விடுதலை புலிகளினால் விவசாய செய்கை மேற்கொள்ளப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட பண்ணைக்காணியே இவ்வாறு நில அளவீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த காணி, பின்னர் இராணுவ சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குறித்த காணியினை அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.