முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வாய்தர்க்கம்

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இணைத்தலைவர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இணைத் தலைவர்களான ரிசாட் பதூர்தீன், காதர்மஸ்தான், வடக்கு முதல்வர் சி.விவிக்கினேஸ்வரன் ஆகியோர் இல்லாத நிலையிலேயே இக்கூட்டம் இடம்பெற்றது.

எனினும் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வடமாகாண அமைச்சர்களான க.சிவநேசன், ஞா.குணசீலன், அனந்தி சசிதரன் மற்றும் வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

அத்துடன் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் ஆ.புவனேஸ்வரன் ஜெனோபர் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெளிமாவட்ட மீனவர்களின் பிரவேசம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனிற்கும் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts