வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன.
அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மாவீரர் துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கமைய நேற்று முதல் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்ல பகுதிகளில் பொது மக்கள் உள்ளிட்ட முன்னால் போராளிகள் மற்றும் மாவீர்ர் குடும்பங்கள் சிரமதான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிரதான பணிகளில் ஈடுபட்ட ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது,
கடந்த வருடம் போன்று துயிலுமில்லங்களில் அரசியல் அரங்கேற்றப்படுவதை அனுமதிக்க போவதில்லை என தெரிவித்தார்.
இதேபோன்று வடக்கு கிழக்கு பகுதியில் உள்ள அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களிலும் தற்போது துப்பரவு பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.