இரணைமடு பிரதேசத்தில் இருந்து எந்தவொரு ராணுவமுகாமும் அகற்றப்படவில்லை என்று ராணுவப்பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இராணுவப்பேச்சாளர் இதனை கூறியுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்களுக்கு அமைய இரணைமடு பகுதியில் இருந்து ராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதா? என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்கும் போதே ராணுவப்பேச்சாளர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்ததோடு, இராணுவ ரீதியான தீா்மானங்கள் மற்றும் தேவைகளுக்ககாக ராணுவ முகாம்கள் இடம் மாற்றப்படும் எனவும் யாருடைய அழுத்தங்களுக்காவும் நடைபெறமாட்டாது எனவும் தெரிவித்துள்ளாா்.
மேலும், ராணுவத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறியவர்கள் தம்மை சட்டரீதியாக விடுவித்து கொள்வதற்கான உரிமை உள்ளதாகவும் அவர் கூறினார்.