வடமாகாணத்தின் சில மாவட்டங்களுக்கு இன்றைய தினம் மின்சாரம் தடை ஏற்படும் என மின்சார சபையின் வடமாகாணப் பிரதி பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.
வடக்கில் கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சார பராமரிப்பு தொடர்பிலான புனரமைப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சி கௌதாரிமுனையிலும், காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை மன்னார் தாராபுரம் பகுதியிலும் மின் தடை ஏற்படுத்தப்படும்.
மேலும், வவுனியா குருக்கள் புதுக்குளம், குருக்களூர், பறையனாங்குளம், நீலியா மோட்டை ஆகிய பகுதிகளிலும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.