கர்பிணி தாய்மார்கள் தொலைபேசி ஊடாக போசாக்கு உணவு பொருட்களை பெறும் வசதி!

கர்பிணி தாய்மார்கள் எதிர்வரும் காலங்களில் வரிசையில் நிற்காமல், தொலைபேசி ஊடாக போசாக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளக் கூடிய வசதியினை மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் சாகலரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை-தெனியாய பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற காணி உறுதிபத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நாங்கள் கர்பிணி தாய்மார்களுக்கு இருபது ஆயிரம் பெருமதியான போசாக்கு பொருட்களை வழங்கி வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் அவர்கள் வரிசையில் நிற்காமல் தொலைபேசி ஊடாக அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை எடுப்போம்” என கூறினார்.

Related Posts