சம்பந்தனுக்கு எதிராக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு

புதிய அரசமைப்பு தொடர்பில் தமது கருத்தை தெரிவிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுமதி மறுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துதள்ளார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம்நாள் விவாதம் நேற்று (புதன்கிழமை) அரசியலமைப்பு சபையில் இடம்பெற்றிருந்த நிலையில் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கருத்துக்களை எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்துள்ள போதிலும் எனது கட்சியின் கருத்தையோ அல்லது எனது கருத்தையோ முன்வைப்பதற்கு அனுமதி வழங்க எதிர்க்கட்சித் தலைவர் மறுக்கிறார். இதன்மூலம் எதிர்க்கட்சித் தலைவர் எனது சிறப்புரிமையை மீறியுள்ளார்” என்று சபாநாயகரிடம் முறையிட்டுள்ளார்.

Related Posts