கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை கிருபாகரன் என்பவருக்கு, இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியான சுனில் தாப்ரூ என்பவரை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, இவர் மீது சுமத்தப்பட்ட பிறிதொரு குற்றச்சாட்டிற்காக, ஐந்து வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும், மற்றொரு குற்றச்சாட்டிற்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பியசேன கமகே உத்தரவிட்டுள்ளார்.