நாட்டில் நிலவும் மழையுடனான கால நிலை தொடரும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டத்துடன் மழைவீழ்ச்சி காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதே போன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் கடும் காற்று ஏற்படும் எனவும் மலைப்பாங்கான பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சில பிரதேசங்களில் மழைவீழ்ச்சி 100 மில்லி மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுவதோடு, மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வட மேற்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மிக அதிகமான மழை வீழ்ச்சியாக 150 மில்லி மீற்றர் வரை எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய காலநிலை நிலவும் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கான அறிவுறுத்தல்
மேலும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துவோர் அதிக கவனம் செலுத்த வேண்டுமென சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குறிப்பாக சீரற்ற காலநிலையினால் அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சாரதிகள் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை குறைத்துக்கொள்ளுமாறு போக்கு வரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ள னர்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 மீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு கேட்டு கொண்டுள்ளதுடன் இரண்டு வாகனங்களுக்கு இடையிலான இடைவெளியை 2 மீற்றராக வைத்துக் கொள்ள வேண்டும் என அதிவேக நெடுஞ்சாலை தகவல் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, ஊவா மாகாணங்களில் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 24 மணித்தியாலங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியதுடன் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது.
மேலும் நாட்டை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 –- 40 கிலோமீற்றர் வரை காணப்பட்டதோடு வட கடல் பிரதேசங்களில் புத்தளம் தொடக்கம் மன்னார் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 -– 80 கிலோ மீற்றர் வரை காணப்பட்டது.
இவ்வாறான சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களும் பதிவாகின.
கடும் மழை காரணமாக கம்பளை தொழுவை உட பலாத்த பிரதேச சபை க்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக வீடுகள் சேதமடைந்த மையால் 10 குடும்பத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஹட்டன் வில்ப்ரட் பிரதேசத் திலும் மண்சரிவினால் வீடு ஒன்று சேத மடைந்துள்ளது. கடும் மழை காரணமாக ராவனா ஆற்றின் நீர் மட்டமும் அதிகரித் திருந்தது.