பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு அரசியல் வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேல் மாகாண உள்ளூராட்சி மன்றமொன்றின் முன்னாள் உறுப்பினர் மற்றும் வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் ஆகியோர் தொடர்பாகவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு பேணுவதாகவும், நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் இந்த அரசியல்வாதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பிலும் திட்டமிட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.