யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கின் சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 13ஆம் திகதவரை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கொலைச் சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை.
இந்த நிலையிலேயே சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.