மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“சீனி நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மென் பாண வகைகளில் 6 கிராமுக்கும் அதிக சீனி காணப்படுமாயின், மேலதிகமாக காணப்படும் ஒவ்வொறு கிராமிற்கும் ஒரு ரூபாய் வரி அறவிடவுள்ளது.
இதன்பொருட்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிட்டியுள்ளது. சுமார் 70 வீதமான உயிரிழப்புக்கள் தொற்றா நோய்கள் காரணமாகவே ஏற்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது” என கூறினார்.