தரவரிசையில் மிகவும் பின்தங்கியுள்ள இலங்கை பல்கலைக்கழகங்கள்!

இலங்கையில் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக பல்கலைக்கழகங்களில் தரப்படுத்தலின்படி வெளியிடப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைப் பட்டியலின் மூலமே இது தெரியவந்துள்ளது.

குறித்த தரவரிசைப் பட்டியலின்படி கொழும்பு பல்கலைக்கழகம் 156ஆவது இடத்தில் காணப்படுகிறது. தரவரிசையில் 124ஆவது இடத்திலுள்ள டாக்கா பல்கலைக்கழகத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே கொழும்பு பல்கலைக்கழகமானது விளங்குகிறது.

கொழும்பு பல்கலைக்கழகத்தினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கௌரவ. டொக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தினால் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட டொக்டர் பட்டமானது ஏராளமான எழுத்து மற்றும் இலக்கண தவறுகளுடன் பல்கலைக்கழக உயர்நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இத்தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகமானது மேலும் பின்தங்கிய நிலையில் 242ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இத்தரவரிசைப் பட்டியலில் அமெரிக்காவை மையமாகக் கொண்ட பல்கலைக்கழகங்கள் முன்னிலையில் திகழும் அதேவேளை, 5, 6, 7, 8 ஆகிய இடங்களில் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts