யாழ் இந்திய துணை தூதுவா் ஆர்.நடராஜனின் மகள் பயணித்த வாகனம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சங்குப்பிட்டியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த, யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் சென்ற வாகனம், சங்குப்பிட்டிப் பகுதியில் வைத்து, அதே திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியுள்ளது.
இதன்போது, தனியாருக்கு சொந்தமான கார் தடம்புரண்டது. எனினும், யாழ் இந்திய துணை தூதுவரின் மகள் பயணித்த வாகனத்திற்கு சிறிய சேதமே ஏற்பட்டது.
இந்த சம்பத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்ப்படவில்லை என பூநகரிப் பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.