முல்லைத்தீவில் அமைந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நீச்சலில் ஈடுபட்டு காணாமல்போன இரு மாணவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்சியாக கழிக்கும் நோக்கில் நண்பர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மற்றைய மாணவனின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றது.