தெற்கில் பாரிய சப்தம்: எரிகல்லாக இருக்கலாம்?

தெற்குப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற பாரிய சப்தம் மற்றும் வெளிச்சம் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நேற்றிரவு 8.45 மணிக்கும் 9.15 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்ட, களுத்தறை, கொழும்பு பிரதேசத்துக்கும் இந்த சப்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கொழும்புப் பல்கலைக்கழக வானியல்துறையின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோது ”இது ஒரு எரி விண்கல்லாக இருக்கலாம் எனவும், இவ்வாறு பல நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன” எனவும் தெரிவித்தார்.

Related Posts