வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேரூந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று குறிப்பிடப்படவுள்ளது.