ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டவர் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலில் இருந்து ஒருவர் தள்ளிவிடப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த ரயிலில் பயணித்த இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலே, இவ்வாறு கொடூரத்தில் முடிவுற்றுள்ளது.

ராகம மற்றும் ஹொரப்பே ரயில் நிலையங்களுக்கு இடையே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையில், உயிரிழந்தவருடன் மோதலில் ஈடுபட்டவரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts